Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச)
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 233 தொகுதிகளின் உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
உடல்நலக் காரணங்கள் மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் பேரவையில் நேரடியாக பங்கேற்க முடியாத சில உறுப்பினர்கள், பின்னர் சபாநாயகரை தனியாக சந்தித்து பதவியேற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விஜய் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்த ஒரு தொகுதியைத் தவிர மற்ற 233 தொகுதிகளின் உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அரசின் முதல் சட்டப்பேரவை நடவடிக்கையாக நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ