Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில், இன்று காலை முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கும் விஜய் சென்றார்.
அங்கு வைகோவின் மகன் துரை வைகோ, விஜய்க்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற சந்திப்பில், முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு வைகோ வாழ்த்து தெரிவித்து, தமிழக மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்பட வேண்டுமென கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்பு முடிந்து வெளியேறிய விஜய்யை, வீட்டின் வாசலிலிருந்து கார் வரை வந்து வைகோ வழியனுப்பினார்.
அப்போது இருவரும் இணைந்து வெளியே காத்திருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினர்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam