Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, செவிலியர்களுக்கு இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகத் திகழ்ந்து, நோயாளிகளின் நலனுக்காக பகலிரவாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர் சகோதர, சகோதரிகளுக்கும், சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகப்பெரிய துணையாக உள்ளது.
அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்கள் பணி, என்றும் போற்றுதலுக்குரியது.
என்று அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b