காமாக்யா கோயிலில் பாஜக தலைவர் நிதின் நபின் வழிபாடு
கவுகாத்தி, 12 மே (ஹி.ச) அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 1
BJP Leader Nitin Nabin Offers Prayers at Kamakhya Temple


கவுகாத்தி, 12 மே (ஹி.ச)

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றியது. இதில் பாஜக 82 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான அசாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி தலா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று பதவியேற்கிறார்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அசாம் வருகை தந்துள்ள பாஜக தலைவர் நிதின் நபின் இன்று கவுகாத்தியில் உள்ள மா காமாக்யா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபின்,

மா காமாக்யாவின் ஆசியால்தான் அசாம் மக்கள் பிரதமர் மோடி மற்றும் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான அரசின் மீது அசாம் மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

எனது குடும்பத்துடன் இங்கு வரும் வாய்ப்பு கிடைத்தது இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b