சென்னையில் இருந்து 228 பயணிகளுடன் புறப்பட்ட எத்தியாட் ஏர்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு
சென்னை, 12 மே (ஹி.ச.) சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு செல்லும் எத்தியாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம், இன்று காலை 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நடைமேடை 25 ல் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 228 பயணிகள் 10 விமான
Etihad


சென்னை, 12 மே (ஹி.ச.)

சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு செல்லும் எத்தியாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம், இன்று காலை 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நடைமேடை 25 ல் இருந்து புறப்பட தயாரானது.

விமானத்தில் 228 பயணிகள் 10 விமான ஊழியர்கள் 238 பேர் ஏறி அமர்ந்திருந்தனர்.

அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இதை அடுத்து விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர் மற்றும் சென்னை விமான நிலைய தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது விமானத்தில் ஹைட்ராலிக் பிராப்ளத்தால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்திலிருந்த 228 பயணிகளும், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் பழுது பார்க்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் விமானம் ஓடு பாதையில் ஓடிக்கொண்டு இருந்தபோதே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு, விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டதால், விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந் 238 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN