Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராகவும் அறியப்படும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு இந்த அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் அவர் செயல்படுவார் என கூறப்படுகிறது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அரசு அமைப்புகளில் கட்சியினருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என சில கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஆனால், கடந்த காலங்களில் பல முதலமைச்சர்களும் தங்களுக்கு நெருக்கமான நபர்களை சிறப்பு அதிகாரிகளாக நியமித்திருப்பதாக தமிழக வெற்றிக் கழக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P