Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அதிமுக முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.
மேலும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறோம். அதிமுக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை.
சட்டமன்றக் குழு ஆலோசனையின் போது சில முன்மொழிவுகளை பொதுச்செயலாளர் வைத்ததாகவும்,திமுகவை எதிர்த்து தலைமுறை தலைமுறையாக அரசியல் செய்து வந்துள்ளோம்.
அப்படிப்பட்ட திமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தோம்.
திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக இல்லாமல் போய்விடும் என்பதால் அதனை நிராகரித்தோம். கட்சி புத்துயிர் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கொறடாவாக சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவரங்கள் முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுக தோல்விக்கு கூட்டு பொறுப்பை ஏற்கிறோம். தோல்விக்கான காரணங்களை ஆராய பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பொதுச்செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ