மே 14 அன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வாய்ப்பு
சென்னை, 12 மே (ஹி.ச.) திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்
திமுக


சென்னை, 12 மே (ஹி.ச.)

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, அதற்கான காரணங்கள் மற்றும் கட்சியின் நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தேர்தல் தோல்விக்கு காரணமாக செயல்பட்டதாக கருதப்படும் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சி தலைமையிலிருந்து கடுமையான எச்சரிக்கை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்துவது, மாவட்ட அளவிலான செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P