Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பரவி வரும் போதை பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் தனிப்பட்ட போதை பொருட்கள் தடுப்பு படை உருவாக்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகரில் 12 இடங்களிலும், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 2 இடங்களிலும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 65 இடங்களில் போதை பொருள் தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான குற்றங்களை விரைவாக கண்டறிந்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P