Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. தொடர்ந்து தற்போது மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த மே 7ஆம் தேதி தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு பிறகு தொடர்ச்சியாக 4 நாட்களும் அதே விலையே நீடித்து வந்தது.
அதாவது கடைசியாக 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,150க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றமுன்தினம் பிரதமர் மோடி அடுத்த ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இதனால் தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. ஆனால் இன்று தங்கம் விலை (மே 12) மீண்டும் உயர்ந்தது.
அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,330க்கும், சவரனுக்கு ரூ.1840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு சவரன் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P