Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் இன்று பொறுப்பேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சட்டசபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.
மேலும், ரவிசங்கர் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதையும் அறிவிக்கப்பட்டது.
ஜேசிடி பிரபாகர் முன்னாள் அதிமுக நிர்வாகி ஆவார்.
பல ஆண்டுகளாக அரசியலில் செயல்பட்டு வந்த அவர், தற்போது தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரவிசங்கர் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தற்போது துணை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ