மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது - கமல்ஹாசன்
சென்னை, 12 மே (ஹி.ச.) வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு 717 மதுபானக் கடைகளை மூடு
Kamal Haasan


சென்னை, 12 மே (ஹி.ச.)

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு 717 மதுபானக் கடைகளை மூடும் முடிவை அறிவித்துள்ளதற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.

மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.

வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b