மே 12, இன்று சர்வதேச செவிலியர் தினம்..!
தமிழ்நாடு, 12 மே (ஹி.ச.) சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம
க


தமிழ்நாடு, 12 மே (ஹி.ச.)

சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

மிகப் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் கையில் விளக்கை ஏந்தி போர்க்களத்தில் அடிபட்ட வீரர்களைக் கவனித்த விதமே , அன்றையக் காலகட்டத்தில் இவரின் சாதனை.

மே 12, 1820 ல் பிறந்தார்.

இன்று அவரின் 200 வது பிறந்த நாள்.

இந்த நாளை கௌரவிக்கும் விதமாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

1860 ல் முதன்முதலில் செவிலியர் பயிற்சி வகுப்பைத் துவக்கினார்.

கடந்த 1867 ம் ஆண்டு இந்தியா வந்து , டில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீவன்ஸ் மருத்துவமனையில் நர்சுகளுக்கான முதல் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தவர்.

சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இவரின் ஆலோசனைப்படி தான் கட்டப்பட்டது.

உலகெங்கும் பெண்கள் தான் அதாவது 90 விழுக்காடு பெண்கள் தான் செவிலியராகப் பணி புரிந்து வருகிறார்கள்.

இன்று உலகில் 3 கோடி செவிலியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

அவர்களின் பொறுமையும், பணிவான சேவையும் தான் மருத்துவர்களின் சேவையை விட சிறப்பானது.

இவர்களின் தன்னலமற்ற சேவை தான் நோயாளியை விரைவில் குணப்படுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 50 சதவீதத்திற்கு மேல் செவிலியர் மற்றும் மிட்ஓய்ப் தான்.

இந்தியாவில் இந்த கொரோனா கால கட்டத்தில் எத்னையோ ஏச்சுக்களையும், பேச்சுக்களையும்,சில சமயம் வீணர்களின் கல்லடிகளையும் தாங்கிக் கொண்டு அவர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது.

Hindusthan Samachar / Durai.J