நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கியதில் இரண்டு பேர் பலி
நீலகிரி, 12 மே (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தால மொக்கை என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ரகு (28) தனது நண்பர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் வனப்பகுதி வழியாக நடந்து வரும் போது காட்டு யானை தாக்கியது இதில் சம்பவ இடத
Death


நீலகிரி, 12 மே (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தால மொக்கை என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ரகு (28) தனது நண்பர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

நள்ளிரவு 2 மணி அளவில் வனப்பகுதி வழியாக நடந்து வரும் போது காட்டு யானை தாக்கியது இதில் சம்பவ இடத்திலேயே ரகு உயிரிழந்தார்.

உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

வனம் ஒட்டிய பகுதிக்கு அருகில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் வெளியில் சுற்றுவதும் கவனக்குறைவாக செல்வதும் இது போன்ற வீரபத்துகளை விளைவிக்கும் என தெரிவித்துள்ள வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் 180042545456 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வனவிலங்குகள் நடமாட்டத்தை பொதுமக்கள் தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு ரோந்து குழுவினர் உடனடியாக சென்று வனவிலங்குகளை விரட்டுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதே போல மசினகுடி பகுதியில் கல் குவாரி பகுதிக்கு சென்ற ராஜப்பன் (40) என்ற பூசாரியை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். இவரது உடலை கைப்பற்றி உதகை அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லபட்டது. சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN