Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 12 மே (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி கன்டோன்மென்ட் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விபத்துக்கான சரியான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து இதுவரை முழுமையான தகவல் வெளியாகவில்லை.
காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து செய்தியை அறிந்ததும் உடனடியாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது:
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தரமான, உயரிய சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எந்தவித அலட்சியமும் காட்டப்படக் கூடாது. அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, அயோத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து தொடர்பான கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b