Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 12 மே (ஹி.ச.)
தெற்கு வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் இந்த வார இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இலங்கை கடற்கரைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி, வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இதனுடன் தொடர்புடைய சூறாவளி சுழற்சி கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை பரவி காணப்படுவதாகவும், இந்த அமைப்பு அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam