சமயபுரம் பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதி விபத்து- பெண் ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை, 12 மே (ஹி.ச.) தஞ்சை மாவட்டம் தச்சங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி புஷ்பா (42) அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி மனைவி காசி அம்மாள் (37) ஆகியோர் இன்று அதிகாலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்கு
Accident


தஞ்சை, 12 மே (ஹி.ச.)

தஞ்சை மாவட்டம் தச்சங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி புஷ்பா (42) அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி மனைவி காசி அம்மாள் (37) ஆகியோர் இன்று அதிகாலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அசூர் பிரிவு சாலை அருகே நடந்து சென்ற பொழுது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி தஞ்சை பட்டுக்கோட்டை மதுக்கூரை சேர்ந்த முஸ்தபா மகன் மூனாப் ஜெப்ரிப் ( 19 )என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து பாதையாத்திரை சென்ற புஷ்பா மற்றும் காசியம்மாள் மீது மோதியுள்ளது,

இதில் சம்பவ இடத்திலேயே புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார் காசி அம்மன் பலத்த காயம்அடைந்தார், அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோன்று நேற்று காலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் என் ஐ டி கல்லூரி எதிரேபுதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் காப்புடையான்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (23), பாரதி (29) ஆகியோர் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக சென்ற போது தஞ்சை ஒரத்தநாடு வடபாதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) முருகானந்தம் (37), தனது நண்பர் வினோத் (37) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய விபத்தில் ஹரிஷ், பாரதி மற்றும் வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில் முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே நாளில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று இரண்டு கும்பல் மீது சாலை விபத்துக்கள் நடந்து இரண்டு விபத்துகளிலும் தலா ஒருவர் இறந்துள்ளது பாதயாத்திரை சொல்லும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN