சத்தியமூர்த்தி பவனில் முதலமைச்சர் விஜய்க்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு!
சென்னை, 12 மே (ஹி.ச.) தமிழக அரசியலில் முக்கிய கவனம் பெற்ற நிகழ்வாக, காங்கிரஸின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் வருகை தந்தார். அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அலுவலக வாசல் வரை சென்று சால்
விஜய்


சென்னை, 12 மே (ஹி.ச.)

தமிழக அரசியலில் முக்கிய கவனம் பெற்ற நிகழ்வாக, காங்கிரஸின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் வருகை தந்தார்.

அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அலுவலக வாசல் வரை சென்று சால்வை அணிவித்து வரவேற்றார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முக்கிய அரசியல் சந்திப்புகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

விஜயின் வருகையை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

“முதல்வர் விஜய் வாழ்க” என முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

சமீபத்திய சட்டப்பேரவை அரசியல் பரபரப்பில், தவெக தலைமையிலான அணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு கூட்டணி உறவை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

சமீப நாட்களில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அவர் சென்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam