Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையின் முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசனுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதி அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில், தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணியை சட்டப்பேரவைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவைக் கட்சியின் துணைத் தலைவராக செஞ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் அ. கணேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கொறடாவாக விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ச. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் தேர்வின் மூலம் சட்டப்பேரவையில் பா.ம.க. தனது அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ