தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு
சென்னை, 12 மே (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க அ
முதலமைச்சர்


சென்னை, 12 மே (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, வழிபாட்டுதலங்கள் அருகே செயல்பட்டு வந்த 276 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. அதேபோல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே இருந்த 186 கடைகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இயங்கி வந்த 255 டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பு, மாணவர்களின் நலன் மற்றும் பெண்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக பள்ளி மற்றும் கோயில்கள் அருகே உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்த நிலையில், தற்போது அதற்கு முக்கிய தீர்வு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளின் பட்டியலை தயாரித்து, மூடும் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P