Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 12 மே (ஹி.ச.)
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தமிழக முழுவதும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த சூழலில் மதுரை மாவட்டத்தில் சுமார் 9 கடைகள் மூடப்பட்டுவதாக அறிவித்த நிலையில்,
இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை-தேனி நெடுஞ்சாலையில் செல்வ விநாயகர் கோவில், தனி வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் எண்-5288 என்ற அரசு மதுபான கடை அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அறிவித்த கோவில், பள்ளி மற்றும் பேருந்து நிலையம் அருகில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள 717 மதுபான கடைகளை மூட அறிவிப்பு எதிரொலியாக உசிலம்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் அருகே செயல்பட்டு வந்த 1 மதுபான கடை மூடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J