Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 12 மே (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை உள்ள 1500 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் சிறப்பு அம்சமான வராக நதி இரண்டு கரையிலும் ஆண் மருத மரம், பெண் மருத மரம் அமைந்துள்ளது. இந்த நதி புண்ணிய நதியாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள வராக நதிக்கரையில் தை அமாவாசை, மகாளலி அமாவாசை, ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கியமான அமாவாசை தினங்களில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுத்து, தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது வராக நிதி ஆற்றில் பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை பொருட்கள், திதி கொடுக்கும் வரும் பொதுமக்கள் விட்டுச்செல்லும் இலைகள் துணிகள் குப்பைத்தொட்டி அமைக்காததால் ஆற்றில் விட்டு செல்கின்றனர்.
இதனால் வராக நிதி ஆற்றில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN