Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 12 மே (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகிகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திரைப்பட நடிகை அஞ்சலி திருவண்ணாமலைக்கு வருகை தந்து அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்தார், முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து, நவகிரகங்களுக்கு முன்பு விளக்கேற்றி வழிபட்டு, அம்மன் சன்னிதானம் முன்பு உள்ள கொடிமரம் எதிரே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அண்ணாமலையாரை வழிபட்டார்.
அதனைத் தொடர்ந்து யாகசாலை அருகே கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் புகைப்படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோயிலுக்கு வந்திருந்த நடிகை அஞ்சலி உடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN