பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது - தமிழக வெற்றிக் கழகம் எச்சரிக்கை
சென்னை, 12 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது என கட்சியின் தலைமை நிலையச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் வெளிய
தவெக


சென்னை, 12 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது என கட்சியின் தலைமை நிலையச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டு மக்களின் நலனை குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் அளித்துள்ள நம்பிக்கையை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக சாலைகள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் அல்லது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் எங்கும் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது என்றும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் எந்தவித கொண்டாட்டங்களிலும் கழகத் தோழர்கள் ஈடுபடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த அறிவிப்பு கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P