அசாம் மாநிலத்தில் ரூ.2 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
கவுகாத்தி, 12 மே (ஹி.ச.) அசாம் மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக அரசு அம்மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடங்குகிறது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 1
அசாம் மாநிலத்தில்  ரூ.2 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு


கவுகாத்தி, 12 மே (ஹி.ச.)

அசாம் மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக அரசு அம்மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடங்குகிறது.

126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றியது. இதில் பாஜக 82 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான அசாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி தலா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பாஜக, அசாம் கண பரிஷத் (AGP), மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், சர்மா பாஜக மற்றும் NDA சட்டமன்றக் கட்சிகளின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்படி அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று பதவியேற்கிறார்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார்.

இன்று கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

அசாம் மக்கள் மூன்றாவது முறையாக பாஜகவின் மீது வைத்துள்ள நம்பிக்கையை, ஹிமந்த பிஸ்வ சர்மா மெய்ப்பித்துக் காட்டுவார். அசாம் மாநிலம் நிச்சயம் வளர்ச்சி அடையும்

அசாம் மாநிலத்திற்காக எனது அமைச்சகம் முக்கிய உள்கட்டமைப்பு முதலீடுகளைத் திட்டமிட்டுள்ளது.

எனது துறையின் சார்பாகவும், ஏறக்குறைய 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயலாக்கத்திற்குத் தயாராக உள்ளன. அசாம் மாநிலத்தை ஒரு முற்போக்கான, வளமான மற்றும் செழிப்பான மாநிலமாக உருவாக்குவதில் நாங்கள் பங்காற்றுவோம்.

என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறினார்.

குவாஹாத்தியில் இன்று நடைபெற உள்ள சர்மாவின் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Hindusthan Samachar / vidya.b