பார்க்கிங்கில் தூங்கிய காவலாளி மீது கார் ஏறி விபத்து - வேளச்சேரியில் தனியார் தொலைக்காட்சி அதிகாரியிடம் போலீசார் விசாரணை
சென்னை, 12 மே (ஹி.ச) சென்னை வேளச்சேரியில் கட்டிட பார்க்கிங் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த முதிய காவலாளி மீது கார் ஏறியதில் அவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டிய நபரிடம் வேளச்சேரி போலீசார் விசாரண
Hh


சென்னை, 12 மே (ஹி.ச)

சென்னை வேளச்சேரியில் கட்டிட பார்க்கிங் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த முதிய காவலாளி மீது கார் ஏறியதில் அவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டிய நபரிடம் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி விஜிபி நகர் விரிவாக்கம் பகுதியில் முழுமையாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் கன்னியப்பன் (76) என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு அவர் அந்தக் கட்டிடத்தின் கார் பார்க்கிங் பகுதியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, வேளச்சேரியைச் சேர்ந்த அஜய் (30) என்பவர் தனது காரை பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட கவனக்குறைவால், பார்க்கிங் பகுதியில் படுத்திருந்த கன்னியப்பன் மீது கார் ஏறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் கன்னியப்பனின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக காரை ஓட்டி வந்த அஜய்யே அவரை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய அஜய் தனியார் தொலைக்காட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ