Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதலமைச்சர் விஜய் குறித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அவையில் பேசிய அவர், “சட்டப்பேரவையில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். அவையின் உண்மையான எஜமானர்கள் மக்கள் தான்.
அவர்களின் பிரச்சனைகளுக்கு அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மோதிக்கொள்ள நம்மை மக்கள் சட்டப்பேரவைக்கு அனுப்பவில்லை. ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்” என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்த கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து முதலமைச்சர் விஜயை காண வந்தனர்.
தமிழ்நாட்டில் அமைதிப்புரட்சியாக ‘விசில் புரட்சியை’ முதலமைச்சர் விஜய் நடத்தி இருக்கிறார்” என்று பாராட்டினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam