எழுதி வைத்துக்கொள்ளுங்கள்,துலிபாலா தோல்வி உறுதி -மாமிள்ளப்பள்ளி போராட்டத்தில் அம்பதி ராம்பாபு ஆவேச பேச்சு
ஆந்திர மாநிலம் , 13 மே (ஹி.ச.) ஆந்திர பிரதேச மாநிலம் பொன்னூர் தொகுதிக்குட்பட்ட மாமிள்ளப்பள்ளி பகுதியில் மக்காச்சோள விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சா
A


ஆந்திர மாநிலம் , 13 மே (ஹி.ச.)

ஆந்திர பிரதேச மாநிலம் பொன்னூர் தொகுதிக்குட்பட்ட மாமிள்ளப்பள்ளி பகுதியில் மக்காச்சோள விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ‘சலோ மாமிள்ளப்பள்ளி’ என்ற போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் அம்பதி ராம்பாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எம்.எல்.ஏ. துளிப்பல்லா நரேந்திர குமார் மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.

விவசாயிகளின் வீடுகள் மற்றும் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவது எந்த வகையிலும் ஏற்க முடியாதது என்று கூறிய அவர், கேள்வி கேட்பவர்கள்மீதே தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

வரும் தேர்தலில் துலிபாலா நரேந்திரா தோல்வியடைவது உறுதி. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று அம்பதி ராம்பாபு சவால் விடுத்தார்.

விவசாயிகளின் கால்தூசிக்கும் அவர் சமமாக இருக்க மாட்டார் என்றும் விமர்சித்தார்.மேலும், எங்கள் குடும்பம், சமூகத்தினர் மற்றும் கட்சியை குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

திரிபாதி காக்கி சீருடை அணியாமல், தெலுங்குதேசம் கட்சியின் பச்சை நிற சீருடை அணிந்தது போல செயல்படுகிறார் என்றும் விமர்சித்தார்.

அதேபோல் நாரா லோகேஷ் மற்றும் சந்திரசேகர் கூறுவதையே ஐ.ஜி. செய்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

போலி வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், கிடங்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மக்காச்சோளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், தேவையானால் சிறைக்கு செல்லவும் தயார் என்றும் அம்பதி ராம்பாபு தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA