அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் பணிகளுக்கு திரும்பும் பவன் கல்யாண்...
அமராவதி, 13 மே (ஹி.ச.) அறுவை சிகிச்சைக்கு பிறகு கடந்த 3 வாரங்களாக ஓய்வில் இருந்த ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று மீண்டும் அரசு பணிகளில் ஈடுபட உள்ளார். முழுமையாக உடல்நலம் தேறியுள்ள அவர், ஐதராபாத்தி
A


அமராவதி, 13 மே (ஹி.ச.)

அறுவை சிகிச்சைக்கு பிறகு கடந்த 3 வாரங்களாக ஓய்வில் இருந்த ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று மீண்டும் அரசு பணிகளில் ஈடுபட உள்ளார்.

முழுமையாக உடல்நலம் தேறியுள்ள அவர், ஐதராபாத்தில் இருந்து அமராவதி அருகே உள்ள மங்களகிரியில் அமைந்துள்ள தனது முகாம் அலுவலகத்திற்கு வருகிறார்.

பவன் கல்யாண் மீண்டும் தீவிர அரசியல் மற்றும் நிர்வாக பணிகளில் ஈடுபட இருப்பதால் ஜனசேனா கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கன்னவரம் செல்லும் அவர், காலை 10.40 மணியளவில் அங்கு சென்றடைவார் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மங்களகிரிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மதியம் 12:30 மணிக்கு மங்களகிரியில் உள்ள முகாம் அலுவலகத்தை அவர் சென்றடைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.

மேலும் கன்னவரம் விமான நிலையம் முதல் மங்களகிரி வரை பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஜனசேனா தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கூட உள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு முதன்முறையாக பொதுமக்கள் மத்தியில் பவன் கல்யாண் தோன்ற உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA