Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 மே (ஹி.ச.)
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2026ம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.20% ஆகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 3.19 சதம் குறைவாகும். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10, வரை நடத்தப்பட்டன. இந்த ஆண்டு தேர்விற்கு 17,80,365 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 17,68,968 பேர் தேர்வெழுதினர் மற்றும் 15,07,109 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர்.
தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in, என்ற இணைய முகவரிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
முன்னதாக 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15ம் தேதி வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே.8ஆம் தேதி வெளியாகின.
Hindusthan Samachar / VINOTH KUMAR P