தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி - முதலமைச்சர் விஜய் நன்றி
சென்னை, 13 மே (ஹி.ச) தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் தமிழக மக்களுக்கும்
CM Joseph Vijay


Uhh


சென்னை, 13 மே (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதன் மூலம் மக்கள் நம்பிக்கையுடன் அமைந்த தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சட்டமன்றத்தின் ஆதரவு மீண்டும் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளித்து வாக்களித்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “என்றும் நம்முடன் உறுதியாக நிற்கும் கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தலில் நம்மை நம்பி ஆதரவு அளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வது எங்கள் கடமை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ