Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 மே (ஹி.ச.)
கோவை ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்டவாளத்தில் ஏணி வைத்த இரண்டு பேரை கைது செய்து ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன இந்த ரயிலில் அடிக்கடி ரயில்கள் மீது கற்கல் வீசுவது தண்டவாளத்தில் கற்கள் வைப்பது போன்ற செயல்கள் நடந்து வருகின்றன அதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு இடையே திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு செல்லும் அகில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை கடந்து சென்று கொண்டிருந்தது ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்ற போது தண்டவாளத்தின் குறுக்கே அலுமினியத்தால் ஆன ஏண் வைக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எஞ்சின் ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்த முயன்றார்.
அதற்குள் ஏணி மீது ரயில் ஏறியது. இதில் ஏணி துண்டு, துண்டாக உடைந்தது. இதை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இது குறித்து எஞ்சின் ஓட்டுநர் கோவை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ஏணியை அகற்றினர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது இரண்டு பேர் அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் வீரகேரளத்தை சேர்ந்த நாகராஜ், சாஸ்திரி நகரைச் சேர்ந்த கந்தசாமி என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களை கைது செய்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறும் போது;
கைதான இரண்டு பேரும் தண்டவாளத்தின் அருகே கிடக்கும் மது பாட்டில்கள் மற்றும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்து உள்ளனர். அது போன்று ஒரு பழைய அலுமினிய இரும்பு கடைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முயன்று உள்ளனர். அங்கு இருந்தவர்கள் ஏணியை துண்டு, துண்டாக உடைத்து கொண்டு வரும்படி கூறி உள்ளனர்.
இதனால் அந்த ஏணியை உடைப்பதற்காக தண்டவாளத்தின் குறுக்கே வைத்து உள்ளனர். எஞ்சின் ஓட்டுநர் ஏணியை பார்த்ததும் மெதுவாக ரயிலின் இயக்கியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / ANANDHAN