இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த மாபெரும் அரசியல் தலைவர் - பக்ருதின் அலி அகமது
தமிழ்நாடு, 13 மே (ஹி.ச.) பக்ருதின் அலி அகமது இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த மாபெரும் அரசியல் தலைவர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார் 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். தில்லி சென்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில
க


தமிழ்நாடு, 13 மே (ஹி.ச.)

பக்ருதின் அலி அகமது இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த மாபெரும் அரசியல் தலைவர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்

1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.

தில்லி சென்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியிலும், பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் உயர் கல்வி பயின்றார்.

லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் (வழக்கறிஞர்) பட்டம் பெற்றார்.

1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.

இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார்.

1967ஆம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1974ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்று, இறக்கும் வரை பதவியில் இருந்த பக்ருதின் அலி அகமது 1977ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J