காலையிலேயே மக்கள் தலையில் இடியை இறக்கிய செய்தி - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
புதுடெல்லி, 13 மே (ஹி.ச.) தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி உயர்வால் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் விலை மேலும் அதிகரிக்க
தங்கம்


புதுடெல்லி, 13 மே (ஹி.ச.)

தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரி உயர்வால் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பு உயர்வு காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது சுங்கவரி உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

திருமணம், விழாக்காலங்கள் மற்றும் சேமிப்பு முதலீடுகளுக்காக தங்கம் வாங்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வணிகர்கள் மற்றும் நுகர்வோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வு நடவடிக்கையானது உலகில் தங்கத்தை அதிகம் நுகர்வு செய்யும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் அதன் தேவையைக் குறைக்கக்கூடும். இருப்பினும், அவை உள்நாட்டு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயங்களில் ஒன்றான ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் உதவக்கூடும்.

முன்னதாக, பிரதமர் மோடி பொதுமக்கள் தேவையற்ற தங்க வாங்குதலை தவிர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க வரியை உயர்த்தியிருப்பது “தங்கம் வாங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கும் முயற்சி” என்ற விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P