கேரளத்தின் முதலமைச்சரை தேர்வு செய்வதில் நீடிக்கும் குழப்பம் - 9 நாட்களாகியும் முடிவு எட்டப்படாத அவலம்
கேரளம், 13 மே (ஹி.ச.) கேரள சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் தேர்வில் கட்சிக்க
கேரளா


கேரளம், 13 மே (ஹி.ச.)

கேரள சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் முதல்வர் தேர்வில் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

கே சி வேணுகோபால் ரமேஷ் சன்னிதாலா மற்றும் சதீசன் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளதால், இறுதி முடிவை எடுக்க காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி டெல்லியில் கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து பேசிய மூத்த தலைவர் முரளீதரன்,

எம்.எல்.ஏக்களின் கருத்தை மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சிகள் மற்றும் மக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகே முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.

விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.

மற்றொரு மூத்த தலைவர் M. M. ஹாசன்,

முதல்வர் மற்றும் சட்டசபை குழுத் தலைவரை காங்கிரஸ் தனியாகவே முடிவு செய்யும் என தெரிவித்தார்.

இதேபோல், எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் இடது ஜனநாயக முன்னணியிலும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் இன்று ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தனது தாயாரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான சோனியா காந்தியுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இதன் முடிவில் யார் கேரள முதல்வர் என்பது காங்கிரஸ் அறிவிக்கும் என கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P