வைகாசி மாத பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
திருவனந்தபுரம் , 13 மே (ஹி.ச.) கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில்-ல் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய
K


திருவனந்தபுரம் , 13 மே (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில்-ல் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வைகாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது.

இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

மேலும், வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA