Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 மே (ஹி.ச.)
மதுரையில் கட்டப்பட்டு இரண்டே ஆண்டுகளில் அரசு மருத்துவமனை
கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின்
(JICA) நிதியுதவியுடன், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ்
சுமார் ₹313.35 கோடி மதிப்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய டவர் பிளாக் (Tower Block) 6தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த புதிய கட்டிடத்தில் 23 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் (Operation
Theatres) அமைந்துள்ளன. அதோடு இருதயவியல், இருதய அறுவை சிகிச்சை, பொது அறுவை
சிகிச்சை மற்றும் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவு நோயாளிகளுக்கான வார்டுகள் மற்றும் கட்டண வார்டுகள் (Pay Wards) உள்ளன.
இந்தக் கட்டிடத்தின் முதல் தளத்தில் இதயவியல் பிரிவு வெளி நோயாளிகள் பொதுப்பிரிவு மற்றும் உள்நோயாளிகள் சிறப்புப் பிரிவு என மிக முக்கியமான சிகிச்சை
பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இன்று வழக்கம்போல மருத்துவப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முதல் தளத்தில் உள்ள இதயவியல் துறை நுழைவாயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த 'பால்
சீலிங்' மற்றும் மேற்கூரை பகுதிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் பெயர்ந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அப்போது நோயளிகளின் உறவினர் அப்பகுதியில் நின்று இரண்டு பேர்
பேசிகொண்டிருந்தனர் அப்போது இருவரும் சுதாரித்து நகன்றதால் நோயாளிகளின்
உறவினர்கள் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நல்வாய்ப்பாக யாருக்கும்
காயம் ஏற்படவில்லை என்றாலும், சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மற்றும் அங்கிருந்த செவிலியர்கள் இந்த சத்தத்தைக் கேட்டு பெரும் பீதி அடைந்தனர்.
300 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டு வெறும் இரண்டே ஆண்டுகளில் ஒரு அரசு
மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுவது ஏன்
கட்டுமானப் பணியில் தரம் குறைவாக இருந்ததா
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா
என பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam