Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 மே (ஹி.ச)
நீட் தேர்வு என்பது தொடக்கம் முதலே ஒரு மோசடி என திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கூறி வருவதாகவும், அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நீட் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்கதையாகி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஏழை மற்றும் எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளை நீட் தேர்வு சிதைத்து வருவதாகவும், அதனால் நீட் விலக்கு கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைப்பதே தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்றும், நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் போராட வேண்டும் என்றும் அவர் எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ