எரிபொருள் நெருக்கடி எதிரொலி - டெல்லியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பள்ளிகள் திட்டம்
புதுடெல்லி , 13 மே (ஹி.ச.) உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் சமையல் கியாஸ் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் உயர்த்துவதற
T


புதுடெல்லி , 13 மே (ஹி.ச.)

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்தியாவிலும் சமையல் கியாஸ் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் உயர்த்துவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், நிறுவனங்கள் பணியாளர்களை முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியில் கல்வியை நடத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் டெல்லி பிராந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வியை தொடர்வது குறித்து ஆலோசித்து வருகின்றன.

சில கல்வி நிறுவனங்கள் இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் செலவை குறைப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA