Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவரது பதிவை இடைக்காலமாக நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர்களின் வாதத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், பேரறிவாளன் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவில், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் கழித்து வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கும் வழக்கறிஞர் சட்டப் பிரிவை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரப்பட்டுள்ளது.
அதேபோல், பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட நடைமுறை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ