குதிரை பேரம் நடந்ததாக எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்
சென்னை, 13 மே (ஹி.ச.) தமிழக வெற்றி கழக ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடந்ததாக பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவி
பிரேமலதா விஜயகாந்த்


சென்னை, 13 மே (ஹி.ச.)

தமிழக வெற்றி கழக ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடந்ததாக பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழக வெற்றி கழக ஆட்சியை தக்க வைக்க குதிரை பேரம் நடந்ததாக எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், உங்களுக்கு ராஜகுருவாக இருந்தவரை முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிச்சி நாதன் பண்டிட் என்பவரை நியமித்தது குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதேபோல்,முதலமைச்சர் விஜயை சந்திக்க அன்று முகமூடி அணிந்து கொண்டு வந்தவர் யார் என்பதையும் மக்கள் முன் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam