Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 13 மே (ஹி.ச)
புதுச்சேரி முதலமைசாராக ரங்கசாமி பதவியேற்றார். புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவி மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைத்துள்ள நிலையில், ரங்கசாமி 5-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ரங்கசாமியை தொடர்ந்து, நமச்சிவாயம் மற்றும் மல்லடி கிருஷ்ணா ராவ் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மேலும் அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்றதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam