ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து - முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு
சென்னை, 13 மே (ஹி.ச) ஜோதிடர் ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை தமிழக அரசு ரத்து செய்ததற்கு, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பிலும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ
Madurai Premalatha Vijayakant


Jj


சென்னை, 13 மே (ஹி.ச)

ஜோதிடர் ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை தமிழக அரசு ரத்து செய்ததற்கு, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பிலும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவரை அரசு பணியில் நியமித்ததை எதிர்த்து, இன்று (13.05.2026) தமிழக சட்டப்பேரவையில் நான் கருத்து தெரிவித்திருந்தேன்.

அந்த கருத்தை தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, நியமன ஆணையை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை உடனடியாக கவனத்தில் கொண்டு செயல்பட்ட தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும், விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரத்தன் பண்டிட் நியமன விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில், தமிழக அரசின் திடீர் நடவடிக்கை மற்றும் அதற்கு எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து வந்துள்ள வரவேற்பு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ