Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை ,13 மே (ஹி.ச.)
முதல்வர் விஜய் அவர்களின் ஜோதிடராக கூறப்படும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ரதி தாக்கல் செய்த மனுவில், எந்த விதிகளையும் பின்பற்றாமல், அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நியமனம் “பின்புற வாசல் நியமனம்” என்றும், அது அரசியலமைப்பு சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேநேரத்தில், ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் முறையீடு செய்திருந்தார்.
அந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ