Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 மே (ஹி.ச.)
தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் மே 16ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் மே 22ஆம் தேதி பருவமழை ஆரம்பிக்கும் நிலையில், இந்த ஆண்டு அதற்கு முன்பாகவே தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடல் பகுதியில் நிலவும் சாதகமான வளிமண்டல சூழ்நிலை காரணமாக பருவமழை வேகமாக முன்னேறி வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் மே 14 முதல் 17ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர்தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்கு செல்லும் முன் வானிலை அறிவிப்புகளை கவனிக்குமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ