Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை மறுப்பு
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவரது வழக்கறிஞர் பதிவை இடைக்காலமாக நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அமர்வு, “எதிர்மனுதாரர்களின் வாதத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும், இந்த மனுவுக்கு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர்கள், இரண்டு ஆண்டுகள் கழித்து வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கும் வழக்கறிஞர் சட்டப் பிரிவை சட்டவிரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதேபோல், பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட நடைமுறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam