திருமாவை முதலமைச்சர் ஆக்கலாம் என தி.மு.க.வின் பரிந்துரையை இபிஎஸ் நிராகரித்துவிட்டார்! - சி.வி.சண்முகம்
சென்னை, 13 மே (ஹி.ச.) அதிமுகவில் கொறடா விவகாரம் தொடர்பாக கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சி.வி.சண்முகம்


சென்னை, 13 மே (ஹி.ச.)

அதிமுகவில் கொறடா விவகாரம் தொடர்பாக கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வேறொரு விஷயத்திற்காக பெறப்பட்ட கடிதத்தை தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து தங்களும் தனியாக கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

யார் உண்மையான கொறடா என்பதை சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறிய அவர், “யாருக்கு பதவி ஆசை.. பிள்ளைகள் மீது சத்தியம் செய்ய தயாரா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “நான் டெல்லியில் பேசி விட்டேன்.. நாம் ஆட்சி அமைக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்” என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இதற்கிடையில், திருமாவளவனை முதலமைச்சராக ஆக்கலாம் என தி.மு.க. தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார் என்றும் சி.வி.சண்முகம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam