Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 13 மே (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில் போலீசார் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலையின் மையத் தடுப்பில் மோதி நின்றிருந்த லாரியை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த 4 பேர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட அந்த பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் சாலை விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P