Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 13 மே (ஹி.ச.)
பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி வைக்கப்பட்ட உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூ.4 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 935 ஆக பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.
கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த எண்ணும் பணியில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.4,33,72,935 ரொக்கம் கணக்கிடப்பட்டது.
மேலும், 165 கிராம் தங்கமும், 1.240 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam