Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள், பேரவை நிகழ்வுகள் முடிந்த பின்னரும் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்திற்கு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், காமராஜ், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வருகை தந்தனர். பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு எதிராக சட்டப்பேரவையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சூழலில், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியிருப்பது, அதிமுகவில் உள்கட்சிப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P